நாட்டின் 74வது குடியரசு தினம் - தேசிய கொடியை ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

 
Draupadi

நாட்டின் 74வது குடியரசு தினத்தையொட்டி, டெல்லி கடமை பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

நாட்டின் 74வது குடியரசு தினம் இந்தியா முழுவது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் அனைத்து மாநிலங்களில் தலைநகர்களிலும் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.  இதேபோல் தலைநகர் டெல்லியிலும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக பிரதமர் மோடி  இந்தியா கேட் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். 

குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் குடியரசு தின விழா நடைபெற்றது.  டெல்லி கடமை பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்முதேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஜனாதிபதி கொடி ஏற்றி கொடிவணக்கம் செலுத்தியவுடன் குடியரசு தின அணிவகுப்பு தொடங்கிது.