எனக்கு அப்படியொரு ஆசையே இல்லை.. வெளிப்படையாக பேசிய பிரசாந்த் கிஷோர்

 
பாஜக மட்டும் 100 சீட் வின் பண்ணிட்டா… அமித் ஷாவுக்கு பிரசாந்த் கிஷோர் ஓபன் ஸ்டேட்மென்ட்!

நான் ஏன் தேர்தலில்  போட்டியிட வேண்டும்? அப்படியொரு ஆசை எனக்கு இல்லை என்று பிரபல தேர்தல் வியுக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

பிரபல தேர்தல் வியுக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கடந்த அக்டோபர் 2ம் தேதியன்று பீகாரில்  ஜன் சுரஜ் பாதயாத்திரையை தொடங்கினார். பீகார் முழுவதுமாக  3,500 கிலோ மீட்டர் பாதயாத்திரையாக 38 மாவட்டங்களுக்கும் சென்று அங்குள்ள ஒவ்வொரு பஞ்சாயத்துகளுக்கும்  சென்று மக்களை சந்தித்து வருகிறார். இந்த யாத்திரையின் போது மேற்கு சம்பாரானில் செய்தியாளர்களை  சந்தித்து பேசினார். அப்போது தேர்தலில் போட்டியிடுவீர்களா என்பது உள்பட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு  பிரசாந்த் கிஷோர் பதிலளிக்கையில் கூறியதாவது:

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

நான் ஏன் தேர்தலில்  போட்டியிட வேண்டும்? அப்படியொரு ஆசை எனக்கு இல்லை. நான் எனக்காக ஒரு சுதந்திரமான திட்டத்தை வகுத்துள்ளதால், அவரும் அவரது அடியாட்களும் என்னுடன் மகிழ்ச்சியடையவில்லை. ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் என்னை துன்புறுத்த விரும்புகிறார்கள். என்னை கொஞ்சம் அரசியல் புத்திசாலித்தனம் உள்ள வர்த்தகர் என்று கூறும் ஐக்கிய ஜனதா தலைவர்கள், நிதிஷ் குமாரின் வீட்டில் இரண்டு ஆண்டுகளாக நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று அவரிடம் கேட்க வேண்டும். 

வேலைவாய்ப்பு

நான் பலமுறை சொன்னேன், மீண்டும் சொல்கிறேன், அவர்கள் (நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி அரசாங்கம் ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்பு வழங்குவோம்) வாக்குறுதியை நிறைவேற்றினால் நான் எனது பிரச்சாரத்தை கைவிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரசாந்த் கிஷோர் அண்மையில், பீகாரில் உள்ள தலைவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக எந்த வேலையும் செய்யாமல் தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றனர் என்று  குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.