எந்த கட்சிக்காகவும் அல்லாமல் மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன்... பிரசாந்த் கிஷோர்

 
பாஜக மட்டும் 100 சீட் வின் பண்ணிட்டா… அமித் ஷாவுக்கு பிரசாந்த் கிஷோர் ஓபன் ஸ்டேட்மென்ட்!

எந்த கட்சிக்காகவும் அல்லாமல் மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன் என்று தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆஷிஷ் தேஷ்முக், கிழக்கு மகாராஷ்டிரா பகுதிக்கு (விதர்பா) மாநில அந்தஸ்து பெறுவதற்கான வியூகத்தை வகுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு இடையே பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் குறித்து   செய்தியாளர்கள் பிரசாந்த் கிஷோரிடம் கேள்வி எழுப்பினர்.

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

அதற்கு பிரசாந்த் கிஷோர் பதிலளிக்கையில் கூறியதாவது: காங்கிரஸ் தனது இந்திய ஒற்றுமை பயணத்தை, இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்திலோ அல்லது உத்தர பிரதேசம்  அல்லது மத்திய பிரதேசம் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலோ இருந்து தொடங்கினால் நன்றாக இருந்திருக்கும். மக்களுக்கு நம்பிக்கை இருந்தால், தனி விதர்பா (நாக்பூர் மற்றும் அமராவதி மண்டலங்கள் அடங்கிய பகுதி) மாநில யோசனை தொடர முடியும். போராட்டம் மத்திய அரசை சென்றடைய வேண்டும். அது தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

காங்கிரஸ்

பிரச்சாரம் சமூகத்தில் இருந்து வெளிப்பட வேண்டும். நான் அரசியல் மூலோபாயவாதியாக பணியாற்றுவதை நிறுத்திவிட்டேன், எந்த கட்சிக்காகவும் அல்லாமல் மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான வாய்ப்புகள் இருந்தது. ஆனால் அதனை பிரசாந்த் கிஷோர் மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.