பிரபல நடிகருக்கு மாரடைப்பு - ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

 
mg

பிரபல நடிகரின் தந்தை கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

 தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் கிருஷ்ணா.  இவர் தற்போது தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் மகேஷ்பாபுவின் தந்தை ஆவார்.  இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் .  

mb

 கிருஷ்ணா நேற்று நள்ளிரவில் திடீரென்று வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்திருக்கிறார்.  இதனால் பதறிப் போன குடும்பம் அவரை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  அங்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் கிருஷ்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.    அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.   அதன் பின்னர் அவருக்கு சுயநினைவு திரும்பியிருக்கிறது.

 இதை அடுத்து தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அங்கு அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது .  செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.  

 கிருஷ்ணாவுக்கு தற்போது 79 வயது ஆகிறது.  தெலுங்கு சினிமா திரையுலகில் 300க்கும்  மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கிருஷ்ணா . தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்த கிருஷ்ணா கடைசியாக 2016 ஆம் ஆண்டில் ஸ்ரீ ஸ்ரீ என்கிற படத்தில் நடித்துள்ளார்.  இவரின் மகன் மகேஷ் பாபு தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆக இருந்து வருகிறார் .  

கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவரது ரசிகர்களும்,  மகேஷ் பாபு ரசிகர்களும் விரைவில் கிருஷ்ணா குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.