விஷ சாராயம் -பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

 
ந்

விஷ விசாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்திருக்கிறது.  குஜராத்தில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.

 குஜராத் மாநிலத்தில் ஆமதாபாத் ,பொடாட் மாவட்டங்களில் கடந்த திங்கட்கிழமை காலையில் சாராயம் விற்கப்பட்டிருக்கிறது.  இந்த சாராயத்தை வாங்கி குடித்த பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து இருக்கிறார்கள்.  இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள்.   அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.   ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி 21 பேர் உயிரிழந்தனர். 

வ்

 முதல் கட்ட தகவலில் 21 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 30க்கும் மேற்பட்டோர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று பரபரப்பு எழுந்தது.   இந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று  தெரிவிக்கப்பட்டு இருந்தது.   அதன்படியே  பலியானோர் எண்ணிக்கை நேற்று 28 ஆக அதிகரித்தது.   இது குறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.   சிறப்பு பணய குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

 இந்த சம்பவத்தில் 12 மணி நேரத்தில் பொடாடட் மாவட்டத்தில் ஏழு பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.   இதனால் மொத்த உயிரிழப்பு 40 ஆக உயர்ந்திருக்கிறது என்று காவல்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது . 

விஷ சாராயம் குடித்ததற்காக இதுவரைக்கும் 10 பேர் வரை கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.   அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத்தின் பவ் நகர், ஆகமதாபாத், போடாடட்  மருத்துவமனைகளில் 50க்கும் மேற்பட்டோர்  சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.  இதனால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.