தாமரையை பார்த்தால் மோடி ஜி என்று அர்த்தம் - பிரதமர் மோடி

 
modi

எங்கெல்லாம் தாமரை சின்னத்தை பார்க்குறீர்களோ அப்போதெல்லாம் பாஜக & மோடி உங்களிடம் நேரடியாக வந்துள்ளனர் என்றுதான் அர்த்தம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Image

ஹிமாச்சல பிரதேச சட்டசபைக்கு வரும் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி இமாச்சல பிரதேசம் சோலனில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, “வாக்களிக்க செல்லும் போது, பாஜக வேட்பாளரை நினைவில் வைக்க வேண்டாம். தாமரை சின்னத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் உங்களிடம் தாமரையுடன் வந்துள்ளேன். தாமரை சின்னத்தை பார்க்குறீர்களோ அப்போதெல்லாம் பாஜக & மோடி உங்களிடம் நேரடியாக வந்துள்ளனர் என்றுதான் அர்த்தம். 

வெளிநாட்டில் இருந்து யூரியா கொண்டு வர வேண்டும், ஒரு மூட்டை யூரியா 2000 ரூபாய் ஆனால் அதை நம் விவசாயிகளுக்கு 270 ரூபாய்க்கு குறைவாக கொடுக்கிறோம். மீதி செலவை எங்கள் அரசே ஏற்கிறது. ஆனால் 100 ரூபாய் மானியம் கொடுக்கும் சிலர் அது தொடர்பான விளம்பரம் வெளியிட 1000 ரூபாய் செலவிடுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியின் போது, ​​நிலையற்ற அரசாங்கங்களில் கந்து வட்டி கொண்ட பல்வேறு குழுக்கள் இருந்தன. இத்தகைய சுயநலக் குழுக்களின் இலக்காக சிறிய மாநிலங்கள் இருந்தன. இந்த குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக மட்டுமே செயல்பட்டன” என பேசினார்.