பாலத்தின் அடியில் சிக்கிய விமானத்தால் பரபரப்பு
Nov 13, 2022, 20:30 IST1668351605000

ஆந்திராவில் பாலத்தின் அடியில் சிக்கிய விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்தா ஹவுஸ் நிறுவனத்தினர் பழைய விமானத்தை ஓட்டலாக மாற்றி வாடிக்கையாளர்களை கவர முடிவு செய்தனர். இதற்காக கேரள மாநிலம் கொச்சியில் பழைய விமானம் ஒன்றை வாங்கி கொண்டு டிராலி லாரியில் ஹைதரபாத் கொண்டு வரும் பணியில் ஈடுப்பட்டனர்.
அதன்படி டிராலி லாரியில் விமானத்துடன் புறப்பட்டு வந்தபோது ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் மேதரமெட்லாவில் உள்ள மேம்பாலத்தின் அடியில் விமானம் சிக்கியது. இதனை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேம்பாலத்தில் இருந்து விமானம் சேதமடையாமல் கவனமாக வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.