இன்று இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம்... இந்தியாவில் பார்க்க முடியுமா?

 
TN

 இந்த ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் ஏப்ரல் மாதத்தின் கடைசி நாளான இன்று வானில் நிகழ்கிறது.

TN

சூரிய கிரகணம்  என்பது நிலவின் நிழல் புவியின் மீது விழும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இது  சூரியன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே ஏற்படும்.  சூரிய வெளிச்சத்தை நிலவு முழுமையாக மறைக்கும் போது முழுமையான  சூரிய  மறைப்பும்,  பகுதியளவாக மறைக்கும் போது பகுதி மற்றும் வளைய மறைப்புகளும் ஏற்படுகின்றன.  சூரியனை  நேரடியாகக் காண்பது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உரிய பாதுகாப்புக் கருவிகளுடன் மட்டுமே சூரிய கிரகணத்தை காண இயலும். 

TN

இந்நிலையில் 2022 முதல் சூரிய கிரகணம் இன்று  நிகழும் என நாசா அறிவித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12:15 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 4:08 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கும் என்றும் , இது அண்டார்டிகா, அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகள் ஆகியவற்றில் காண இயலும் என்றும்  இந்தியாவில் பார்க்க முடியாது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான இரண்டாவது சூரிய கிரகணம் வருகிற அக்டோபர் 25-ஆம் தேதி நிகழவுள்ளது . இதை இந்திய மக்கள், மாலையில் சூரியன் மறையும் போது சற்று நேரத்திற்கு பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.