ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்!!

 
tn

அரசுமுறை பயணமாக ஐரோப்பியா நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.

modi

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் நாடுகளில் 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ள நிலையில், ஜெர்மனிக்கு இன்று அதிகாலை பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

modi

ஜெர்மனியில்  பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஓலாஃப் ஷால்ஸை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இந்திய - ஜெர்மனி உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல் டென்மார்க் செல்லும் அவர்,  பிரதமர் மேட்டே பிரெடெரிக்சனை சந்திப்பதுடன், அங்கு நடைபெறும்   2வது இந்தியா- நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். அத்துடன் இதன் தொடர்ச்சியாக ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய நாட்டு பிரதமர்களுடன் மோடி கலந்துரையாடும் மோடி, பிரான்ஸ் சென்று அதன்  அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.