போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி..

 
போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி..


டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  

போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி..

நாட்டின் 74வது குடியரசு தினம் தலைநகர் டெல்லியில் கடமைப்பாதையில் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. கடமைப் பாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூவர்ண கொடியேற்றினார்.  அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின், கொடியேற்றும் முதல் குடியரசு தினம் இதுவாகும். பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி..

முன்னதாக குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள போர் நினைவிடத்திற்கு வந்த பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது  முப்படை தளபதிகள் உடனிருந்தனர். போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர், பிரதமர் குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.