உலகலாவிய வணிக உச்சி மாநாட்டை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..

 
modi

குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று உலகளாவிய படிதார் வணிக உச்சி மாநாட்டை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.  டெல்லியில் இருந்தவாறு  காணொலி வாயிலாக தொடங்கி வைக்க இருக்கிறார்.

இன்று முதல் மே 1-ம் தேதி வரை  மூன்று நாட்கள் நடைபெறவுள்ள  உச்சி மாநாட்டில், அரசாங்க தொழில் கொள்கை, எம்எஸ்எம்இ, புதிய தொழில் மற்றும் பிற கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  குஜராத்தில் அதிகளவு  உள்ள படிதார் சமூகத்தின் சமூக- பொருளாதார மேம்பாட்டிற்கு உத்வேகத்தை வழங்கும் வகையில்,  சர்தார்தம் 'மிஷன் 2026-ன்' கீழ் படிதார் வணிக உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமார் அலுவலகம் தெரிவித்திருக்கிறது,

PM Modi

மேலும்  இதுகுறித்து பிரதமரி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்  கூறியுள்ளதாவது,  இந்த  உச்சி மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படுவதாகவும், இதற்கு முன்னதாக  முதல் இரண்டு உச்சி மாநாடுகள் 2018-ம் ஆண்டு மற்றும் 2020-ம் ஆண்டுகளில் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது  3வது உச்சி மாநாடு குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற உள்ளதாகவும்,   'ஆத்மநிர்பர் சமூகம் ஆத்மநிர்பர் குஜராத் மற்றும் இந்தியா' என்கிற முக்கிய கருப்பொருளின் கீழ் உச்சிமாநாடு நடத்தப்பட உள்ளதாகவும்  பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.  

modi

இந்த உச்சி மாநாட்டின் முக்கிய நோக்கமே படிதார் சமூகத்திற்குள் சிறிய, நடுத்தர  மற்றும் பெரிய நிறுவனங்களை ஒன்றிணைப்பதே ஆகும். மேலும்  புதுய தொழில் முனைவோரை ஊக்குவித்து ஆதரிப்பது மற்றும் படித்த இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உதவிகளை வழங்குவது போன்றவையும் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.