தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

 
modi

தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா(79) இன்று காலமானார்.   மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில்   ஆபத்தான நிலையில் ஐதராபாத் மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவிகள் மூலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். சில மாதங்களுக்கு முன்னர்தான் கிருஷ்ணாவின் மனைவி காலமாகி இருக்கிறார்.தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா.  325 திரைப்படங்களில் நடித்துள்ளார்.   கிருஷ்ணா கடைசியாக 2016 ஆம் ஆண்டில் ஸ்ரீ ஸ்ரீ என்கிற படத்தில் நடித்துள்ளார். இவரின் மகன் மகேஷ்பாபு,   தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறார்.  இவரது மறைவையொட்டி திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நடிகர் கிருஷ்ணாவின் மறைவு சினிமா மற்றும் பொழுதுபோக்கு உலகிற்கு மாபெரும் இழப்பாகும். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது மகன் மகேஷ் பாபு மற்றும் அவரது குடும்பத்தினருடனும் உள்ளன. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.