காளி தேவியின் ஆசி இந்தியாவிற்கு எப்போதும் உண்டு - பிரதமர் மோடி

 
modi

இந்துக்களின் கடவுளான காள் குறித்த கருத்துக்கள் மற்றும் போஸ்டர்கள் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், காளி தேவியின் ஆசி நமது நாட்டிற்கு எப்போதுமே உண்டு என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.  

காளி தேவியைப் பற்றி திரிணமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த பெண் இயக்குனர் தயாரித்த, காளி தேவியைப் பற்றிய ஆவணப்படத்தின் 'போஸ்டரில் காளி புகைப்பிடிப்பது போல் இருந்தது. இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், காளி தேவியின் பெருமையை பற்றி பிரதமர் மோடி கூறியுள்ளார்.  

modi

ராமகிருஷ்ண மடத்தின் முன்னாள் தலைவரான சுவாமி ஆத்மஸ்தானந்தாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், காளி தேவியைப் பற்றி தெளிவான பார்வை உடையவர். அவரது சீடரான சுவாமி விவேகானந்தரும் காளி தேவியின் ஆன்மிக பார்வையை நன்கு உணர்ந்தவர்.

இதன் காரணமாகவே, விவேகானந்தருக்கு அபாரமான ஆற்றலும், வலிமையும் கிடைத்தது .சுவாமி ஆத்மஸ்தானந்தாவுடன் பழகிய அனுபவம் எனக்கு உண்டு. காளி தேவியின் வல்லமை பற்றி அவர் எப்போதும் குறிப்பிடுவார். காளி தேவியிடம், அவருக்கு உள்ள பக்தி என்பது இயற்கையானது. நம்பிக்கை புனிதமாக இருந்தால், காளி தேவியின் சக்தியே நமக்கு வழிகாட்டும்காளி தேவியின் அளவற்ற ஆசி, நம் நாட்டுக்கு எப்போதும் உண்டு. இந்த ஆன்மிக சக்தியுடன் தான், இந்தியா உலக நாடுகளுக்கு வழிகாட்டி வருகிறது. எல்லா விஷயங்களுமே காளி தேவியின் உணர்வால் நிறைந்துள்ளன. மேற்கு வங்கத்தில் நடக்கும் காளி பூஜையில் இவை வெளிப்படுகின்றன. இவ்வாறு கூறினார்.