குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

 
Modi and murmu

குடியரசு தலைவராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக திரௌபதி முர்முவை குடியரசு தலைவர் மாளிகையில் சந்தித்த பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். 

குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகளில் 72.19% வாக்குகளை பெற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். இதனையடுத்து நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. முப்படைகள் புடைசூழ திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற பதவியேற்பு விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா திரௌபதி முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 21 குண்டுகள் முழங்க புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. பதவியேற்பு விழாவில் குடியரசு துணை தலைவர் எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம்.பிர்லா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சா்கள், ஆளுநா்கள், மாநில முதல்வா்கள், முப்படை தலைமை தளபதிகள், மூத்த தளபதிகள், பிற துறை தலைவா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனா். 


இந்நிலையில், பிரதமர் மோடி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். குடியரசு தலைவராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக திரௌபதி முர்முவை குடியரசு தலைவர் மாளிகையில் சந்தித்த பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.