குடியரசு தினம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

 
modi

நாட்டின் 74வது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நாட்டின் 74வது குடியரசு தினம் இந்தியா முழுவது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் அனைத்து மாநிலங்களில் தலைநகர்களிலும் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். இதேபோல்  சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில்குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- நாட்டின் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற நாம் ஒற்றுமையாக முன்னேற வேண்டும் என்று விரும்புகிறேன். சக இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். மேலும், நாட்டின் சுதந்திரம் "அமிர்த மஹோத்சவ்"ன் போது கொண்டாடப்படுவது இந்த முறை சிறப்பு வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.