வெப்ப அலையால் மக்கள் பாதிப்பு- பிரதமர் மோடி ஆலோசனை

 
மோடி

கடும் வெப்பம் மற்றும் மழை காலத்தை எதிர்கொள்வது குறித்து தேசிய பேரிடர் ஆணையம் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

ஒமைக்ரான் வைரஸ் அச்சம்: பிரதமர் மோடி இன்று உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை  | PM Modi to chair meeting with top officials on COVID-19 situation,  vaccination today - hindutamil.in

3 நாள் ஐரோப்பிய நாடுகளின் பயணங்களை முடித்து கொண்டு இன்று காலை 11.30 மணிக்கு டெல்லி திரும்பிய பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு முக்கியமான ஆலோசனை கூட்டங்களுக்கு திட்டமிட்டு இருந்தார். அதன்படி இன்று மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவ்பா மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில், நாடு முழுவதும் கோடை காலத்தில் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்று வீசும் நிலையில் அதிலிருந்து காக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் பருவ மழை காலம் வரவுள்ள நிலையில் அது குறித்தான முன்னெச்சரிக்கை குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதேபோல், மின்சார தட்டுப்பாடு, நிலக்கரி தேவை, கொரோனா அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்தும் பிரதமர் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.