வழிபாட்டுத் தலங்கள் சட்டம் ராம ஜென்மபூமிக்கு மட்டும் விதிவிலக்காக நரசிம்மராவ் அரசால் நிறைவேற்றப்பட்டது.. ப.சிதம்பரம்

 
என் தாத்தா மேல பழி போடாதீங்க… காங்கிரஸை எச்சரித்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பேரன்

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் ராம ஜென்மபூமிக்கு மட்டும் விதிவிலக்காக பி.வி. நரசிம்மராவ் அரசால் நிறைவேற்றப்பட்டது. மற்ற அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக நீதிமன்றங்களில் நடந்து வந்த அயோத்தி நிலத் தகராறு (ராம ஜென்மபூமி- பாபர் மசூதி) வழக்கு 2019 நவம்பர் மாதத்தில் முடிவுக்கு வந்தது. சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, மேலும் வேறு இடத்தில் பாபர் மசூதி கட்ட இடம் கொடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் நாட்டில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. 

ஞானவாபி மசூதி

தற்போது உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மன் சிலைக்கு தினமும் பூஜை நடத்த வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.  இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கறிஞர்  அஜய் குமார் மிஸ்ரா தலைமையில் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று  ஞானவாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவுப்படி கள ஆய்வு பணி  நடந்தது. 

ப சிதம்பரம்

ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசுகையில், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் ராம ஜென்மபூமிக்கு மட்டும் விதிவிலக்காக பி.வி.நரசிம்மராவ் அரசால் நிறைவேற்றப்பட்டது. மற்ற அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் நிலையை மாற்ற முயற்சி செய்யக்கூடாது. அது பெரும் மோதலுக்கு வழிவகுக்கும். இது போன்ற மோதல்களை தவிர்ப்பதற்காக வழிபாட்டுத் தலங்கள் சட்டம் ஆழ்ந்த பரிசீலனைக்கு பிறகு நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார்.