ஆர்.எஸ்.எஸ். நீண்ட காலமாக குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற ஆசையை வளர்த்து வந்தது.. ப.சிதம்பரம்

 
ப சிதம்பரம்

ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பக்தர்களும் நீண்ட காலமாக குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற ஆசையை வளர்த்து வந்ததை நாம் அறிவோம் என்று அந்த அமைப்பை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தாக்கினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பக்தர்களும் நீண்ட காலமாக குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற ஆசையை வளர்த்து வந்ததை நாம் அறிவோம். குடியரசு தலைவர் ஆட்சியானது நாட்டில் பெரும்பான்மைவாதத்தை நிலைநிறுத்தும், பன்மைத்துவம் கொல்லப்படும். 

எதிர்மறையான வளர்ச்சியில் பொருளாதாரம்…….வெட்கமில்லாத ஆர்.எஸ்.எஸ்…… ப.சிதம்பரம் தாக்கு

நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளை புறக்கணித்து விட்டு, மாண்புமிகு பிரதமர் இப்போது தொகுதி அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையே குழிதோண்டி புதைத்து வருகிறார். தொகுதியில் வேட்பாளர் பெயரை வாக்காளர் நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை என்று மாண்புமிகு பிரதமர் கூறினார். மாண்புமிகு பிரதமர் தாமரைக்கு வாக்களியுங்கள், அது மோடிக்கான வாக்கு என்று கூறினார் என பதிவு செய்து  இருந்தார்.

மோடி

இமாச்சல பிரதேசம் சோலனில் விஜய் சங்கல்ப் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி  பேசுகையில், நீங்கள் பா.ஜ.க. வேட்பாளரை நினைவுப்படுத்த வேண்டிய அவசியமில்லை, வாக்களிக்க செல்லும்போது தாமரை சின்னத்தை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் தாமரையுடன் வந்துள்ளேன். தாமரை சின்னத்தை எங்கு பார்த்தாலும் அது பா.ஜ.க. என்றும், மோடி உங்களிடம் வந்து விட்டார் என்று அர்த்தம் என தெரிவித்து இருந்தார்.