முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு எதிரொலி.. உ.பி.யில் மத வழிபாட்டுத் தலங்களிலிருந்து 1 லட்சம் ஒலி பெருக்கிகள் அகற்றம்..

 
சத்தமே வரக்கூடாது.. ஒலி மாசுபாட்டிற்கு கடுமையான அபராதம்.. உத்தரகாண்ட் அரசு முடிவு

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவையடுத்து, அம்மாநிலத்தில் மத வழிபாட்டுத் தலங்களிலிருந்து 1 லட்சத்துக்கும் அதிகமான ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்து வருகிறார். உத்தர பிரதேச மாநிலத்தில் அனுமதியின்றி எந்தவொரு மத ஊர்வலம், ஊர்வலம் நடத்த அனுமதி கிடையாது.  மத வழிபாட்டு தலங்களில் ஒலி பெருக்கிகளை அனுமதியுடன் பயன்படுத்தலாம் ஆனால் அந்த ஒலி சம்பந்தப்பட்ட வளாகத்துக்கு வெளியே கேட்கக் கூடாது என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இதனையடுத்து மத வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத ஒலி பெருக்கிகளை அகற்றும் பணியை தொடங்கினர்.

யோகி

உத்தர பிரதேசத்தில், மத வழிபாட்டுத்தலங்களில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றுதல் அல்லது அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் ஒலி பெருக்கிகளின் ஒலியின் அளவை குறைக்கும் பணியை கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை பலனாக, அம்மாநிலம் முழுவதுமாக இதுவரை   54 ஆயிரம் அங்கீகரிக்கப்படாத ஒலி பெருக்கிகள் மத வழிபாட்டுத் தலங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் 60 ஆயிரம் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மசூதிகளில் ஒலி பெருக்கிகள்

ஜான்சியில் வளர்ச்சி மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் ஒலி பெருக்கி பிரச்சினையை குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார். மேலும், மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து அகற்றப்பட்ட ஒலிபெருக்கிகள் மீண்டும் பொருத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.