டெல்லியில் மேலும் ஒரு நைஜீரிய நாட்டவருக்கு குரங்கம்மை

 
monkeypox negative

டெல்லியில் வசித்து வரும் நைஜீரிய நாட்டவர் ஒருவருக்கு நேற்று குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒரு  நைஜீரிய நாட்டவருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் குரங்கம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவில் நேற்றுவரை 6 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கேரளாவை சேர்ந்த ஒருவர் குணமடைந்துள்ளார்.  இந்நிலையில், கேரளாவில் இன்று மேலும் ஒருவருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 30 வயதான நபருக்கு குரக்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

monkeypox

இந்நிலையில், டெல்லியில் மேலும் ஒரு  நைஜீரிய நாட்டவருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே நேற்று டெல்லியில் வசித்து வரும் நைஜீரிய நாட்டவர் ஒருவருக்கு நேற்று குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றும் ஒருவருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதால், டெல்லியில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.