காரைக்காலில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்!!

 
tn

சிறுவன் பாலமணிகண்டன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

tn

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி சர்வைட்  பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த பால மணிகண்டன் என்ற மாணவனுக்கு  சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலைகளில் ஏற்பட்ட போட்டி காரணமாக மாணவியின் தாய் மாணவன் பால மணிகண்டனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார்.  அதிர்ச்சி அளிக்கக்கூடிய இந்த சம்பவத்தை தொடர்ந்து சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இதனிடையே அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது காவல்துறையினரும்,  மருத்துவர்களும் அலட்சியம்   காட்டியதால் தான் மாணவன் உயிரிழந்தான் என்றும், எனவே  மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவனின்  உறவினர்கள் அரசு மருத்துவமனை மீது குற்றம் சாட்டினர்.

tn
மாணவன் சிகிச்சை விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக மருத்துவர்கள் ,செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் போராளிகள் குழு இன்று முழு கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது.  அந்த வகையில் காரைக்காலில் விஷம் வைத்து கொல்லப்பட்ட சிறுவன் பாலமணிகண்டன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் கடைஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. இதற்கு  இந்து முன்னணி ,காரைக்கால் ,திருநள்ளாறு மற்றும் திருப்பட்டினம் வியாபாரிகள் சங்கம், ஆட்டோ மினி டெம்போ சங்கத்தினர், ஹோட்டல்கள் ,ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியின மக்கள் சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர்  ஆதரவு தெரிவித்துள்ளனர்.