எனக்கு அரசியல் எதிர்ப்பாளர்கள் உள்ளனர் ஆனால் எனக்கு எதிரிகள் இல்லை... ஓமர் அப்துல்லா

 
காஷ்மீர் யூனியன் பிரதேசமாக இருக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன்- ஓமர் அப்துல்லா உறுதி

பா.ஜ.க. தலைவர் தன்னை அரசியல் தலைவர்களில் ஒரு ரத்தினம் என்று பாராட்டியதற்கு, எனக்கு அரசியல் எதிர்ப்பாளர்கள் உள்ளனர் ஆனால் எனக்கு எதிரிகள் இல்லை என்று ஓமர் அப்துல்லா தெரிவித்தார்

ஜம்மு அண்ட் காஷ்மீர் பா.ஜ.க. தலைவர் ரவீந்தர் ரெய்னா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு அண்ட் காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லாவை மாணிக்கம் என்று பாராட்டிய பேசிய வீடியோ டிவிட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரவீந்தர் ரெய்னா பேசியிருப்பதாவது: உமர் அப்துல்லா இருந்தபோது நான் சட்டமன்ற உறுப்பினரானேன், ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்களில் ஒரு தனிநபராக, ஒரு நபராக, உமர் அப்துல்லா ஒரு ரத்தினம் என்பதை நாங்கள் பார்த்தோம்.

பா.ஜ.க.

எனவே நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம். நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தபோது என்னை அழைத்து பேசிய முதல் நபர் உமர் அப்துல்லா. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில்அந்த டிவிட்டுக்கு தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஓமர் அப்துல்லா அளித்துள்ள பதிலில், அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் வெறுக்க வேண்டியதில்லை, அதே நேரத்தில் அரசியல் ரீதியாக உடன்படவில்லை.

ரவீந்தர் ரெய்னா

அரசியலில் ஏன் பிரிவினை மற்றும் வெறுப்பு இருக்கிறது? அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு கொள்ள நாமும் ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில்  வெறுக்க வேண்டும் என்று எங்கே சொல்கிறது? எனக்கு அரசியல் எதிர்ப்பாளர்கள் உள்ளனர், எனக்கு எதிரிகள் இல்லை. ரவீந்தரின் அன்பான வார்த்தைகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்கள் ஒருவரையொருவர் எதிர்ப்பதை அவர்கள் தடுக்க மாட்டார்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்தார்.