காஷ்மீரிகள் பிச்சைக்காரர்கள் அல்ல, தேர்தல் எங்கள் உரிமை அதற்காக மத்திய அரசிடம் கெஞ்ச மாட்டோம்.. உமர் அப்துல்லா உறுதி

 
முதல்ல காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுங்க.. அப்புறம்தான் தேர்தல்.. மத்திய அரசுக்கு செக் வைத்த உமர் அப்துல்லா

காஷ்மீரிகள் பிச்சைக்காரர்கள் அல்ல, தேர்தல் எங்கள் உரிமை, அதற்காக மத்திய அரசிடம் கெஞ்ச மாட்டோம் என்று ஜம்மு அண்ட் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

ஜம்மு அண்ட் காஷ்மீரின் முன்னாள் முதல்வரம், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா அனந்த்நாக் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தேர்தலை நடத்துவதற்கான பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாதது குறித்து உமர் அப்துல்லா கூறியதாவது: ஜம்மு அண்ட் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடத்தப்படாவிட்டால், அப்படியே இருக்கட்டும். நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. காஷ்மீர் மக்கள் பிச்சைக்காரர்கள் அல்ல என்ற நான் மீண்டும் மீண்டும் கூறியுள்ளேன். தேர்தல் எங்கள் உரிமை ஆனால் இந்த உரிமைக்காக அவர்களிடம் (மத்திய அரசு) கெஞ்ச மாட்டோம். 

தேர்தல்

அவர்கள் எங்களுக்கு தேர்தலை மீட்டெடுக்க விரும்புகிறார்கள், நல்லது. ஆனால் அவர்கள் அதை (தேர்தல்) செய்ய விரும்பவில்லை என்றால், அப்படியே இருக்கட்டும். சொத்துக்கள் மற்றும் அரசு நிலங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவதும் ஜம்மு அண்ட் காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படாததற்கு ஒரு காரணம். அதனால் தான் தேர்தலை நடத்தவில்லை. அவர்கள் மக்களை தொல்லை செய்ய விரும்புகிறார்கள். மனிதர்களின் காயங்களுக்கு தைலம் பூசுவதற்கு பதிலாக, காயத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நாட்டம் அவர்களுக்கு இருப்பதாக  தெரிகிறது. 

மத்திய அரசு

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களின் காயங்களை குணப்படுத்த முயற்சிக்கும் என்பது பா.ஜ.க. அரசுக்கு தெரியும். அதேநேரத்தில் அவர்கள் உப்பு மற்றும் மிளகாய்த தடவ மட்டுமே செய்வார்கள். ரஜோரி தாக்குதலை தொடர்ந்து கிராமப் பாதுகாப்பு காவலர்களுக்கு ஆயுதம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவு, 2019ம் ஆண்டில் 370வது பிரிவை ரத்து செய்த போது தேசத்திற்கு அதன் உரிமைகோரல்கள் வீழ்ச்சியடைந்தன என்பதை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.