மகளை அடிக்கடி மிரட்டி.. முதியவருக்கு 20 ஆண்டு சிறை

 
க்க்க்

மகளை அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த  முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது மங்களூர் நீதிமன்றம்.

 கர்நாடக மாநிலத்தில் தட்சின கன்னடா மாவட்டம்.   அம் மாவட்டத்தில் விட்டலா காவல் எல்லைக்கு உட்பட்ட பெருவாய் கிராமம் .  இக்கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ்.   68 வயதான இந்த முதியவர் தனது மகள் மைனர் பெண்ணை மிரட்டி  பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.  

 அடிக்கடி தன் மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார் அப்துல்.    தொடர்ந்து மிரட்டி மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தந்தையின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தனது குடும்பத்தினரிடம் சொல்லி அழுது இருக்கிறார்.   இதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அப்துல் அஜீஸ் மீது  போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ஜ்ஜ்

 போலீசார் அப்துல் அஜீஸ் மீது  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.   கடந்து 2020 ஆம் ஆண்டில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.   கைது செய்யப்பட்ட அப்துல் அஜீஸ் மங்களூரு கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். 

 இது குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையும் முடிவடைந்து இருக்கிறது.  அப்துல் அஜீஸ் மீது குற்றச்சாற்று உறுதியானதை அடுத்து குற்றவாளி அப்துல் அஜீஸுக்கு இறை 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறார் நீதிபதி ராதாகிருஷ்ணன்.   மேலும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

 நீதிபதியின் உத்தரவுக்கு பின்னர் அப்துல் அஜீசை கைது செய்த  போலீசார் மங்களூரு மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.