காவல் நிலையத்தில் போலீசுக்கு ஆயில் மசாஜ் ! வைரலாகும் வீடியோ

 
[o

காவல் நிலையத்தில் காவலர் ஒருவருக்கு பெண் ஒருவர் ஆயில் மசாஜ் செய்துவிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.  
33விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில் அந்த காவலர் மேலாடை இல்லாமல் உட்கார்ந்திருக்க, அந்த பெண் ஆயிள் மசாஜ் செய்து  விடுகிறார்.

அந்த வீடியோவில் உள்ள போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில்,  அந்த காவல் நிலையம் , பீகார் மாநிலத்தின் சஹர்ஸா பகுதியில் உள்ள காவல் நிலையமெ என்றும்,  அந்த போலீஸ் சஷிபூஷன் சின்ஹா என்பதும் தெரியவந்தது.  


இதையடுத்து அந்த போலீசார் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

மசாஜ் செய்து வரும் அந்த பெண் சிறையில் உள்ள தனது மகனை விடுவிக்க வேண்டும் என்று கோரி அந்த காவல் நிலையம் சென்றிருக்கிறார்.  மகனை விடுவிக்க வேண்டுமென்றால் தனக்கு மசாஜ் செய்துவிடும்படி கேட்டிருக்கிறார் சஷ்பூஷன்.  

மகனை மீட்க வேறு வழியின்றி அந்த பெண்ணும் மசாஜ் செய்துவிட்டிருகிறார்.

இந்த வீடியோதான் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியதால் அந்த போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.