மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

 
ops and amit shah

சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். 

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தங்களது கட்சியின் நலன் கருதி இரு தலைவர்களும் சமாதானமாக போகவேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது.   பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் ஆகியோர் இந்த விஷயத்தில் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் அவர்கள் அரசியல் குறித்து பேச முடியவில்லை. இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 வது ஆண்டு பவள விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். இந்த விழாவில், ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். 

ops

விழா நிறைவடைந்ததும்,  உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். தனிப்பட்ட முறையில் சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடைபெறவில்லை. நிகழ்ச்சியில் மரியாதை நிமித்தமாக வெறுமனே இருவரும் கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தபின்னர் அமித் ஷா, பா.ஜ.க. அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்தது சந்தித்தது மகிழ்ச்சிகரமாகவும், திருப்திகரமாகவும் இருந்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.