இது என்ன வகையான நட்பு என்றே தெரியவில்லை? அஞ்சலியின் தோழியிடம் விசாரணை நடத்த மகளிர் ஆணையம் முடிவு

 
a

அஞ்சலியின் தோழி நிதி அளித்துள்ள வாக்குமூலத்தை வைத்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று முடிவுக்கு வந்திருக்கிறது மகளிர் ஆணையம். 

 டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான் பூரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை 3 மணி அளவில் நேற்று முன்தினம் ஸ்கூட்டியில் சென்ற 20 வயது இளம்பெண் அஞ்சலி மீது கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றிருக்கிறது.  அந்த காரில் ஸ்கூட்டியுடன் சிக்கிய அஞ்சலி 13 கிலோமீட்டர் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக உடல் முழுவதும் கிழிந்து உயிரிழந்திருக்கிறார். 

 இந்த சம்பவத்தில் கார் ஓட்டுநர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஏதும் கொலை செய்யப்பட்டாரா என்ற விசாரணையில் பிரேத பரிசோதனையின் முடிவுகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று கூறுகிறது.  இதனால் காருக்கு காரில் இழுத்துச் செல்லப்பட்டதால் உயிரிழந்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது .

ட்

உயிரிழந்த அஞ்சலியின் தோழி நிதி.  இருவரும் அதிகாலை 1.30 மணி அளவில் ஹோட்டலை விட்டு வெளியே வந்திருக்கிறார்கள்.  இருவருமே மது போதையில் சென்று இருக்கிறார்கள்.  ஓட்டலை விட்டு வெளியேறும் போது இருவரும் தகராறு செய்து கொண்டு வெளியேறி இருக்கிறார்கள்.  3 மணிக்கு விபத்து நடந்திருக்கிறது.  இடைப்பட்ட நேரத்தில் எங்கே சென்றார்கள்? என்ன தகராறு நடந்தது என்று தெரியவில்லை. 

 மூணு மணி அளவில் விபத்து நடந்திருக்கிறது.   விபத்து நடந்த போது  சாலையின் ஒரு பக்கம் தூக்கி அடிக்கப்பட்டு இருக்கிறார் நிதி. ஆனால் அஞ்சலி ஸ்கூட்டியுடன் காருக்கு அடியில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.  காருக்கு அடியில் அவர் சிக்கி இருப்பது தெரிந்தும் காரில் இருந்தவர்கள் காரை ஓட்டிக் கொண்டே சென்று இருக்கிறார்கள் என்கிறார் நிதி.

 இந்த வாக்குமூலத்தை வைத்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி பாலிவால்,   சம்பவத்தில் உயிரிழந்த அஞ்சலியின் தோழி லைவ் ஷோவில் பேசுகிறார்.  தன் கண்முன்னே தோழியை காரில் ஏற்றி கொன்றிருக்கிறார்கள்.   சம்பவம் நடந்த அந்த பகுதியில் இருந்து தோழி உடனே வெளியேறி வீட்டுக்கு சென்று இருக்கிறார். போலீசுக்கு தகவல் சொல்லவில்லை.  அஞ்சலியின் வீட்டிற்கும் தகவல் சொல்லவில்லை.  நேராக வீட்டுக்கு சென்று உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.  இது என்ன வகையான நட்பு என்று தெரியவில்லை.  இது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.