காலக்கெடுவுக்குள் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கினால் பொருளாதார இழப்பிலிருந்து நாட்டை காப்பாற்ற முடியும்.. நிதின் கட்கரி

 
வாங்குன காரை நிறுத்த பார்க்கிங் இல்லாததே வாகன விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் – நிதின் கட்கரி 

காலக்கெடுவுக்குள் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கினால், நாட்டை பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசுகையில் கூறியதாவது: சுதந்திரமான, நேர்மையான ஜனநாயகத்திற்கு சுதந்திரமான பாரபட்சமற்ற, நியாயமான நீதி அமைப்பு அவசியம். காலக்கெடுவுக்குள் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கினால், நாட்டை பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியும். 

நீதிமன்றம்

நீதி தாமதத்தால் பெரிய நிறுவனங்கள் அழிந்து போவதை நான் பார்த்திருக்கிறேன். அரசாங்கத்திலிருந்தோ அல்லது நீதிமன்றத்திலிருந்தோ அவர்களுக்கு நீதி கிடைக்கும் நேரத்தில் அவர்கள் இறந்து விடுவார்கள். அமைச்சரவையில் தீர்ப்பாயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டபோது மத்திய சட்ட அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியிடம் எனது கருத்தை முன்வைத்தேன். 

மோடி

பிரதமர் மோடி மற்றும் சட்ட அமைச்சரிடம் நான் அடிக்கடி கூறுவது, எந்த முடிவை எடுத்தாலும் அது நீதித்துறையின் உரிமை. அதில் யாரும் தலையிடக்கூடாது அல்லது யாராலும் பாதிக்கப்படக்கூடாது. ஆனால் முடிவெடுப்பதற்கு ஒரு கால வரம்பு இருக்க வேண்டும். அதனால் பொருளாதார இழப்பிலிருந்து நாட்டை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.