கொட்டும் மழைக்கு இடையே சபரிமலையில் நிறை புத்தரிசி விழா!!

 
tn

கொட்டும் மழைக்கு இடையே சபரிமலையில் நிறை புத்தரிசி விழா நடைபெற்றது.

  sabarimala

கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம்.  திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு சொந்தமான செட்டிகுளங்கரை  விளைந்த நெற்பயிரை  கதிருடன் சபரிமலை ஐயப்பனுக்கு சமர்ப்பித்து கருவறைக்குள் வைத்து பூஜை செய்வதை நிறைப்புத்தரிசி பூஜை ஆகும். பூஜை செய்யப்பட்ட நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

tn
இந்நிலையில் நிறை புத்தரிசி பூஜை இன்று அதிகாலை 5.40 மணிக்கு நடைபெற்றது.  இதற்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் புக்கிங்  மற்றும் நேரடியாக கோயிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தனர்.  பலத்த மழை கேரளாவில் பெய்து வரும் நிலையில் கொட்டும் மழையில் புத்தரிசி பூஜை நடந்து முடிந்தது. நிறை புத்தரிசி பூஜைக்கு பிறகு இன்றிரவு ஹரிவராசனம் பாடி கோயில் நடை மீண்டும் அடைக்கப்படும். வருகிற 16-ம் தேதி முதல் 21ம் தேதி வரை மாதாந்திர பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது.