வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது இந்திய பொருளாதாரம் சிறந்த நிலையில் உள்ளது.. நிர்மலா சீதாராமன்

 
வாங்குன கடனுக்கு வட்டி மட்டும் ஒரு மாதம் தள்ளுபடி! அசல மறக்காம குடுத்துடுங்க- நிர்மலா சீதாராமன் 

வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது இந்திய பொருளாதாரம் சிறந்த நிலையில் உள்ளது என்று மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு  தொடர்பான விவாதத்தின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது இந்திய பொருளாதாரம் சிறந்த நிலையில் உள்ளது. ஆனால், அரசாங்கம் சொல்வதை விட்டு விலகி செல்கிறது என்று அர்த்தமல்ல. இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கம் மற்றும் உலகளாவிய பொருட்களின் நெருக்கடியால் நாம் பாதிக்கப்படுகிறோம். இவை தான் உண்மை. விலைவாசி உயர்வை யாரும் மறுக்கவில்லை. 

பொருளாதார வளர்ச்சி

நமது பணவீக்க விகிதம் ஒரு பேண்ட் கொண்டுள்ளது. 4 என்பது இடைநிலை புள்ளி,  அதற்கு 2 புள்ளிகள் கூடுதல் அல்லது குறைவாக இருக்க இடமளிக்கப்படுகிறது. சில முயற்சிகளுடன் நாம் 7ல் (சில்லரை விலை பணவீக்கம் 7 சதவீதம்) இருக்கிறோம் அல்லது 7ஐ காட்டிலும் சிறிது அதிகம். பணவீக்கத்தை 7க்கும் குறைவாகவும், 6க்கும் குறைவாகவும் வைத்திருப்பதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுத்திருப்பதை உறுதி செய்துள்ளோம். அதனால் யாரும் அதனை மறுக்கவில்லை. 

இந்திய ரிசர்வ் வங்கி

பாதிக்கப்பட்ட மக்களுடன் அரசாங்கம் தொடர்ந்து பேசி வருகிறது.  ஆனால் நீங்கள் ஏழைகளுக்காக எதுவும் செய்யவில்லை, அம்பானிகள் மற்றும் அதானிகளுக்காக எப்போதும் இருக்கிறோம் என்று எங்களிடம் கூறுவது, நாட்டுக்கு மிகவும் அவசியமான விவாதத்தை அரசியலாக்குவதுதான். நாம் ஒவ்வொருவரும் மீட்பு செயல்முறைக்கு பங்களிக்கிறோம். பணவீக்கம் போன்ற தலைப்புகளில் விவாதங்களில் பங்கேற்பேன், கோவிட்டால் நான் பாதிக்கப்படவில்லையென்றால் முதல் நாள் முதல் அவையில் இருந்திருப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.