புதிய சட்டமசோதா - பாலியல் வழக்கில் இனி முன்ஜாமீன் இல்லை

 
up

 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமின் வழங்குவதை தடுக்கும் பொருட்டு குற்றவியல் நடைமுறை சட்ட புதிய மசோதா இன்று உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து  வந்தன.   மத்திய மாநில , அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும் இந்த குற்றச்சம்பவங்களை தடுக்க முடியாமல் திணறல் இருந்து வந்தது.  இந்த நிலையில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

h

தலைநகர் டெல்லியில் தினமும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும்,  நாட்டின் பாதுகாப்பாற்ற பெரு நகரமாக டெல்லி திகழ்கிறது என்றும்  தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவித்தது.   டெல்லியை அடுத்து மும்பையும் மும்பையில் 5543 குற்ற வழக்குகளும்,  பெங்களூருவில் 3127 குற்ற வழக்குகளும் பதிவாகி இருக்கின்றன.  19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் உங்கள் மும்பை பெங்களூருவில் 12.76% மற்றும் 7.2% பதிவாகி இருக்கின்றன.  

 பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமின் வழங்குவதை தடுக்கின்ற பொறுப்பு குற்றவியல் நடைமுறை புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது  குறித்து உத்தரப்பிரதேச சட்டப்பேரவை விவகாரத்துறை  அமைச்சர் சுரேஷ்குமார் கன்னா,   சட்ட திருத்த மசோதா மீது பேரவையில் பேசியபோது,   போக்சோ சட்டம்  பெண்களிடம் தவறாக நடந்து கொள்கின்ற குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமின் வழங்க மறுக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது என்றார்.  

அவர் மேலும்,  இளைஞர்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் முன் ஜாமின் மறுப்பது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சியங்களை அழிக்கும் வாய்ப்புகளை குறைக்க நேரிடும்.   பாதிக்கப்பட்டவர்கள் பிற சாட்சிகளை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிரட்டுவதில் இருந்தும்,  துன்புறுத்துவதில் இருந்தும் தடுப்பதற்காகத் தான் இந்த ஏற்பாடு என்றார்.