நேதாஜி 126வது பிறந்தநாள் : பிரம்மாண்ட மணல் சிற்பம் உருவாக்கி அஞ்சலி..

 
நேதாஜி 126வது பிறந்தநாள் : பிரம்மாண்ட மணல் சிற்பம் உருவாக்கி அஞ்சலி..


நேதாஜியின் 126 வது பிறந்தநாளையொட்டி, புகழ்பெற்ற மணற்சிற்பக் கலைஞராக உள்ள சுதர்சன் பட்நாயக்  மிகப்பெரிய மணற்சிற்பத்தை உருவாக்கி அஞ்சலி செலுத்தினார்.  

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் புகழ்பெற்ற மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.   உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் மணற்சிற்பம் மூலம் தெரிவித்து வருகிறார்.  தேசிய தினங்கள், தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள், விழிப்புணர்வு பிரச்சாரம் என  எந்த விஷயமானாலும்,  ஒடிசா கடற்கரையில் அது தொடர்பான   மணல் சிற்பங்களை வடிவமைத்து வருபவர். பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரரான சுதர்சன் தற்போது நேதாஜியின் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.

Sudarsan Pattnaik

விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரையில் மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் நேதாஜியின் பிரம்மாண்ட  மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். மணல் சிற்பத்துக்குப் பின்னால் சுமார் 450 ஸ்டீல் கிண்ணங்களையும் சுதர்சன் பயன்படுத்தி இருக்கிறார். மேலும் நேதாஜி என்றும், ஜெய்ஹிந்த் என்றும் எழுதியுள்ளார்.