ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவேன்... பரூக் அப்துல்லா தகவல்

 
பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் நீட்டிப்பு!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவேன் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கடந்த சில தினங்களுக்கு முன் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து பரூக் அப்துல்லா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என பேசப்பட்டது. இந்நிலையில், எதிர்வரும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவேன் என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறியதாவது: தேசிய மாநாட்டு கட்சி ஜனநாயக கட்சி, புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக டிசம்பர் 5ம் தேி கட்சியில் தேர்தல் நடைபெறும். 

தேர்தல்

மக்கள் (கட்சியினர்) வேட்புமனு தாக்கல் செய்வார்கள், அடுத்த கட்சி தலைவரை யார் என்பதை கட்சி பிரதிநிதிகள் முடிவு செய்வார்கள். ஜம்மு அண்ட் காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன். சட்டப்பேரவை தேர்தலுக்கு தேசிய மாநாட்டு கட்சி தயாராக உள்ளது. ஜம்மு காஷ்மீரை அதன் பிரச்சினைகளில் இருந்து மீட்டெடுக்க வெற்றியாளராக கட்சி உருவாகும். தேதிகளை அவர்கள் அறிவிக்கட்டுமு், அவர்கள் (பா.ஜ.க.) நிற்கும் இடத்தை காட்டுவோம். இளைஞர்கள் கட்சியை முன்னின்று நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. என்னால் முடிந்ததை நான் செய்துள்ளேன். கட்சிக்காரன் என்பதால் தப்பிக்கவில்லை, அப்படியே இருப்பேன். கட்சியின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுபடுவேன். 

பா.ஜ.க.

கட்சியில் புதியவர்கள் இணைவது கட்சியை அடிமட்ட அளவில் மேலும் வலுப்படுத்தும். நாங்கள் ஒன்றாக தேசிய மாநாட்டு கட்சியை வலுப்படுத்துவோம். ஜம்மு காஷ்மீரின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம். தேசிய மாநாடு கட்சி செய்தது வரலாறு. 1996ல் நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது துப்பாக்கி குண்டு தாக்குதல்கள் எங்கும் நடந்தன, பள்ளிகள் மூடப்பட்டன, சாலைகள், பாலங்கள் இல்லை. நாங்கள் ஒழுங்கை மீட்டெடுத்தோம். ரஹ்பர் இ தலீம் ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறந்தோம். தொலைதூர பகுதிகளில் 300 மருத்துவர்களை நியமித்தோம். ஜம்மு காஷ்மீரை மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு வர சேதமடைந்த உள்கட்டமைப்பை மீட்டெடுத்தோம். அப்போது எங்கும் இல்லாத கட்சிகள் இன்று பெயர் பெற முயன்றனர். ஜம்மு காஷ்மீரை மேலே கொண்டு வர மற்றும் நாட்டின் மற்ற பகுதிகளுடன் அணிவகுத்து செல்வதை மக்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.