என்.டி.ஆரின் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

 
NTR Daugter

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமாராவிற்கு மொத்தம் 12 பிள்ளைகள். அதில் 8 பேர் மகன்கள் மற்றும் 4 பேர் மகள்கள் ஆவர். என்.டி.ராமாராவ்  1996ம் ஆண்டு தனது 71 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதேபோல் அவரது 8 மகன்களில் 3 பேர் ஏற்கனவே மரணமடைந்து விட்டனர். 4 மகள்களில் உமா மகேஸ்வாரிதான் இளைய மகள் ஆவார். இவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்தார்.   அண்மையில் தான் உமா மகேஸ்வரி மகளின் திருமணம் நடைபெற்றது. இதனிடையே கடந்த நில நாட்களாக உடல்நலக்குறைவால் உமா மகேஸ்வரி சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள இல்லத்தில் உமா மகேஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உமா மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.