#Breaking இன்று வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்!

 
neet

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. 

neet pg

எம்பிபிஎஸ்,  பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட்  நுழைவு தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது.18 லட்சத்து 72 ஆயிரத்து  343 பேர் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும் 17 லட்சத்தில் 78 ஆயிரத்து 725 பேர் தேர்வு எழுதினர்.தமிழ் ஆங்கிலம் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு எழுதிய நிலையில் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் நீட் தேர்வை எதிர் கொண்டனர்.

 சிபிஎஸ்இ  தேர்வு முடிவு தாமதமானதை ஒட்டி நீட் தேர்வு முடிவும்  தாமதமானது.  இதன் காரணமாக பொறியியல், மருத்துவ உயர் படிப்பு சேர்க்கை  என்பது தள்ளிப்போனது.  கடந்த மாதம் பொறியியல் கலந்தாய்வு நீட் தேர்வு முடிவினால்  ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நீட் தேர்வு முடிவுகள் குறித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. 

neet-s4

இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தேர்வு முடிவுகளை http://neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.