பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா மரணத்தில் தீவிரவாத தொடர்பு? 3 மாநிலங்களில் என்ஐஏ சோதனை!!

 
tn

டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

tn 

பஞ்சாபி பாடகரும் , காங்கிரஸ் பிரமுகர்மான சித்து முஸ்வாலா கடந்த மே 29ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.   பிரபல பாடகரான இவர் பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸில் இணைந்தார்.  இவருக்கு பணம் பறிக்கும் கும்பல்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்து நிலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சித்துவின் உடலில் இருந்து 25 புல்லட்டுகள் பிரேத பரிசோதனை எடுக்கப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இவரது மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

tn

இந்நிலையில் டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா மரணத்தில் தீவிரவாத தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் என்ஐஏ சோதனையிட்டு வருகின்றனர்.