#JUSTIN நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு!

 
neet pg

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

neet

 நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.  எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் நடக்கும் நீட் நுழைவுத்தேர்வை சுமார் 18.72 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் நடைபெறும் இத்தேர்வை எழுத சுமார் 1.42 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.  பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது. 

neet

நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் கவனத்திற்கு...!

  • மாணவர்களின் வருகைப் பதிவு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்
  • ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து குறைந்தபட்சம் இரு நகல்கள் வைத்திருக்க வேண்டும்
  •  பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு மைய நுழைவாயில் மூடப்படும்; அதன்பின் அனுமதியில்லை
  •  பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை அவசியம்
  •  மாணவர்கள் செல்போன்களில் கொண்டுவரும் அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது
  • தேர்வு மையத்தில் வழங்கப்படும் N95 முகக்கவசத்தை மாணவர்கள் கட்டாயம் அணிய வேண்டும்
  •  மாணவர்கள், பெற்றோரின் கையெழுத்து ஹால் டிக்கெட்டின் உரிய இடத்தில் இருக்க வேண்டும்
  • தேர்வு எழுதும் முன், எழுதி முடித்த பின் என இரு முறை வருகைப் பதிவேட்டில் மாணவர்கள் கையெழுத்திட வேண்டும்
  • செல்போன் உள்ளிட்ட எந்த மின்சாதனப் பொருளையும் மாணவர்கள் தேர்வறைக்குள் கொண்டுவரக்கூடாது என்று தேசிய தேர்வு முகமை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது