நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது!!

 
neet pg

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வருகிற ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. மதியம் 2 மணிக்கு முதல் மாலை 5:20 மணி வரை நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக இதுவரை 18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வு நாடு முழுவதும் 546 நகரங்களிலும்,  இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நடத்தப்படுகிறது. 

neet

நீட் தேர்வுக்கு 10 லட்சம் 64 ஆயிரத்து 606 பெண்கள்,  8 லட்சத்து 7 ஆயிரத்து 711 ஆண்கள்,  12 திருநங்கைகள் என மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  தமிழகத்திலிருந்து மட்டும் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் இத்தேர்வினை எதிர்கொள்ள உள்ளனர். 

neet

இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகியுள்ளது. நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் ஜூலை 17ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் https://neet.nta.nic.in என்ற  இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. இதை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.