உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு..

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர விரும்புபவர்களுக்கு ‘நீட்’ எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் இந்த பொது நுழைவுத் தேர்வினை நடத்தி வருகிறது. இளங்கலை மருத்துவ படிப்பு மட்டுமின்றி, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ படிப்பு என அனைத்து படிப்புகளுக்கும் இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.. அந்தவகையில் இந்த ஆண்டு, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான (DM/MCh/DNB (Super Speciality) நீட் நுழைவுத் தேர்வு ஜூன் 17,18ல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் இந்த தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது என்றும், தேர்வு தேதி தள்ளி வைக்கப்படுவதாகவும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. புதிய தேதிகள்பின்னர் அறிவிக்கப்படும் எனவும், https://natboard.edu.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் தகவல்களை மட்டும் அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டது. இந்நிலையில் தற்போது உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வு நடத்தப்படும் என மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.