நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

 
neet pg

நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் வரும் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

neet
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வு,  தேர்வு மருத்துவ படிப்புக்கு தேசிய தகுதித் தேர்வாக நடத்தப்படுகிறது.  அந்த வகையில் நாடு முழுவதும் ஜூலை 17 -ம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கு  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்  செயல்முறை கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கியது. மாணவர்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.  அனைத்து விண்ணப்பதாரர்களும்,உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

neet

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு வரும் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.  இந்த சூழலில் வரும் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.   இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வரும் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.