2024 தேர்தலில் மக்கள் தெலுங்கு தேசம் கட்சியை நிராகரித்தால் அதுதான் எனது கடைசி தேர்தல்.. சந்திரபாபு நாயுடு உருக்கம்

 
போற போக்கை பார்த்தா கட்சியில நீங்களாவது இருப்பீங்களா? தனி மரமான சந்திரபாபு நாயுடு

2024 ஆந்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெறச் செய்து ஆட்சியில் அமர வைக்கவில்லை என்றால் அதுதான் எனது கடைசி தேர்தலாக இருக்கும் என்று அந்த கட்சியின் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு  தெரிவித்தார்.

ஆந்திர பிரதேசம் கர்னூல் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் சார்பில் நடைபெற்ற பேரணியில் அந்த கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அந்த பேரணியில் சந்திரபாபு நாயுடு பேசுகையில் கூறியதாவது: நான் சட்டப்பேரவைக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்றால், நான் அரசியலில் இருக்க வேண்டும் என்றால், ஆந்திராவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும். 

தெலுங்கு தேசம்

அடுத்த (2024) தேர்தலில் எங்கள் வெற்றியை நீங்கள் உறுதி செய்யாவிட்டால் அதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கும். என்னை ஆசீர்வதிப்பீர்களா? நீங்கள் என்னை நம்புகிறீர்களா?. நான் மட்டுமே விஷயங்களை சரிசெய்து மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வேன், எதிர்காலத்தை மற்றவர்களுக்கு ஒப்படைப்பேன். இது ஒவ்வொரு வீட்டிலும் விவாதப் பொருளாக மாற வேண்டும். எனது போராட்டம் குழந்தைகளின் எதிர்காலம், மாநிலத்தின் எதிர்காலம், இது பெரிய பேச்சு அல்ல, நான் முன்பு செய்தேன், ஒரு மாதிரி இருக்கிறது (அதை நிரூபிக்க). 

மோடி

யோசியுங்கள். நன்மை தீமைகளை எடைபோடுங்கள். நான் சொல்வது சரியென்றால் எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். சிலர் என் வயதை கேலி செய்கிறார்கள். நானும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே வயதுடையவர்கள். பைடன் 79 வயதில் அமெரிக்க அதிபரானார். நான் மாநிலத்தை அபிவிருத்தி செய்து செல்வத்தை உருவாக்குவேன். அதன் மூலம் வருவாய் பெருகும், அதன் மூலம் நலத்திட்டங்களை செயல்படுத்துவோம்.  உண்மையில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம், ஆனால் முதல்வர் ஜெகன் ரெட்டியை போலல்லாமல், அதற்காக பெரிதாக கடன் வாங்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.