உ.பியை விட்டு வெளியேற வேண்டும் - ஆஷிஷ் மிஷ்ராவுக்கு கடும் நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன்

 
அ

 ஒரு வருடத்திற்கு பின்னர் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா மகன் ஆசிஸ் மிஸ்ராவுக்கு இன்று கடும் நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 3ஆம் தேதி அன்று திகுனியா கிராமத்திற்கு சென்றார் உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா .  அவருக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அப்போது விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி மத்திய இணை அமைச்சர் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் ஜீப் கூட்டத்திற்குள் புகுந்தது.   இதில் ஜிப்பில் அடிபட்டு நாலு விவசாயிகள் உயிரிழந்தனர். 

 ஆசிரமடைந்த விவசாயிகள் மத்திய இணை அமைச்சர் மகன் ஓட்டி வந்த காரை தாக்கினார்கள்.   இதில் பாஜக தொண்டர் இரண்டு பேர், ஒரு பத்திரிகையாளர், ஓட்டுநர் உயிரிழந்தார்கள்.   இந்த சம்பவத்தில் மொத்தம் எட்டு பேர் உயிரிழந்தார்கள்.   சம்பவத்தின் போது காரில் இருந்தது மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ரா என்பது தெரிய வந்தது .  இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

அச்

 இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஆசிஸ் மிஸ்ரா அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.   அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.   இதை அடுத்து ஆசிஸ் மிஸ்ரா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

 கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அசிஸ் மிஸ்ரா உள்பட 12 பேர் மீது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  கொலை முயற்சி, சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல், ஆபத்தான ஆயுதங்களை வைத்திருத்தல்,  மோட்டார் வாகன சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .  இதன் பின்னர் ஒரு வருடத்திற்கு பின்னர் உச்ச நீதிமன்றம் ஆசிஸ் மிஷ்ராவுக்கு இன்று இடைக்கால ஜாமின் வழங்கி இருக்கிறது.

 உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சூரியகாந்த் , மகேஸ்வரி ஆகியோர் கடும் நிபந்தனைகளுடன் இந்த ஜாமினை வழங்கி இருக்கிறார்கள்.  மனுதாரர் ஆசிஸ் மிஷ்ரா ஜாமீன் பத்திரம் எழுதிக் கொடுத்த பின்னர் விசாரணை நீதிமன்றம் மனநிறைவு அடைந்தால் 8 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்படும்,  சாட்சியங்கள் மீது நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவிதமான தாக்கத்தையும் அழுத்தத்தையும் செலுத்தக்கூடாது ஆசிஸ் மிஸ்ரா,  இடைக்கால ஜாமின் வழங்கிய ஒரு வாரத்திற்குள் ஆபீஸ் மிஸ்ரா உத்தர பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும்,  ஆசிஸ் மிஸ்ரா தனது பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் விசாரணைக்காக மட்டுமே உத்திர பிரதேசத்திற்குள் அவர் வரவேண்டும்,  ஆசிஸ் மிஸ்ரா தங்கி இருக்கும் பகுதியில் இருக்கும் காவல் நிலையத்திற்கு வாரம் ஒரு முறை சென்று தனது இருப்பை தெரிவிக்க வேண்டும் என்று கடும்  நிபந்தனைகளுடன் இந்த இடைக்கால ஜாமின் வழங்கியிருக்கிறார்கள்.