வாக்குக்கு 10 கிராம் தங்கம் தருவதாக கூறி ஏமாற்றிய பாஜக! கடுப்பான மக்கள்

 
bjp

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் முனுகோடு சட்டப்பேரவைக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு 10 கிராம்  தங்கம் தருவதாக பாஜக கூறியதாகவும் ஆனால் ₹ 4 ஆயிரம் மட்டுமே வழங்கியதால் பாஜக தலைவர்களுக்கு வாக்காளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனால் முனுகோடு மண்டலம் கொரடிக்கால் கிராம மக்கள்   தங்கம் தராவிட்டால் வாக்களிக்க மாட்டோம் என கூறி உள்ளனர். இதேபோல் ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி வாக்காளர்களுக்கு ₹ 3 ஆயிரம் வழங்கி உள்ளனர். 

முனுகோடு தொகுதியில் அதிக அளவில் பொது மக்கள் பருத்தி வேலைக்கு செல்வது வழக்கம் ஆனால் தேர்தல் தேதி அறிவித்தது முதல் அரசியல் கட்சியினரின் கூட்டத்திற்கு  கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பணம் கொடுத்து அழைத்து சென்றதால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. ஆனால்  இடைத்தேர்தல்  காரணமாக அரசியல் கட்சிகள் கூட்டத்திற்கு சென்றதன் மூலம் ஒருத்தருக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பணம் கிடைத்ததாக கூலி தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தேர்தல் திருவிழா நாளை வாக்கு பதிவுடன் நிறைவு பெறக்கூடிய நிலையில் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை வைத்து பல கோடிக்கு பெட்டிங் சூதட்டாம் நடைபெற்று வருகிறது. ரூ 100 முதல்  பல லட்சங்களில் தேர்தலில் பாஜகவா அல்லது டி.ஆர்.எஸ். கட்சியா என்ற வகையில் சூதாட்டம் நடைபெற்று வருகிறது.