லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - மகாராஷ்ராவில் 9 பேர் உயிரிழப்பு

 
tn

லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் மகாராஷ்டிராவில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

tn

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை - கோவா நெடுஞ்சாலையில் லாரியும் வேனும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். ராய்கார்ட் மாவட்டத்தில் மும்பை கோவா நெடுஞ்சாலையில் உள்ள மாங்கான் பகுதியில் இந்த விபத்து  ஏற்பட்டுள்ளது.  இந்த விபத்தில் லாரியும் காரும் அப்பளம் போல நொறுங்கியுள்ளது.  நான்கு பெண்கள் உட்பட ஒன்பது பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  அத்துடன் நான்கு வயது சிறுவன் ஒருவன் படுங்காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

accident

 இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.  அதிகாலையில் பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.