கர்ப்பினி மருமகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாமியார்

 
f

 நான்கு மாத கர்ப்பிணியை பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார் மாமியார்.  வரதட்சணை பிரச்சனையால் தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூர சம்பவம்.

 அச்சம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்.  இவரது மகள் கீர்த்தனா.   அதே கிராமத்தைச் சேர்ந்த பண்டாரி என்பவரை கடந்த 2021 ஆம் ஆண்டில் திருமண செய்திருக்கிறார்.   திருமணம் நடந்து சில மாதங்கள் வரைக்கும் கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்கிறார்கள்.   அதன் பின்னர் கணவர் மெல்ல மெல்ல தன் சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறார். 

 இதனால் கணவன் மனைவிக்கு இடையே தினமும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது.   ஊர் பெரியவர்கள் பல முறை இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்துள்ளனர்.  மனைவி கீர்த்தனாவுக்கு பல கொடுமைகள் செய்து வந்திருக்கிறார் பண்டாரி.  

bb

 இந்த நிலையில் கணவருடன் கீர்த்தனா ஹைதராபாத்திற்கு வேலை தேடிசென்றிருக்கிறார்.  அங்கே தனிக்குடித்தனம்  நடத்திக்கொண்டு வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.   ஒரு சில வாரங்களிலேயே அவரது மாமியார் விவசாய வேலை இருப்பதால் கீர்த்தனாவை ஊருக்கு வரும்படி அழைத்திருக்கிறார்.  கீர்த்தனாவிற்கு விருப்பமில்லை.   ஆனாலும் கணவன் பண்டாரி,  கீர்த்தனாவை கட்டாயப்படுத்தி அழைத்துக்கொண்டு அச்சம்பேட்டைக்குச் சென்று இருக்கிறார் .

அங்கே கீர்த்தனா வேலைக்காக விவசாய நிலத்திற்கு சென்று இருக்கிறார்.   அப்போது அங்கிருந்த மாமியார் கீர்த்தனாவை தகாத வார்த்தையால் பேசியிருக்கிறார் .அடித்து உதைத்து இருக்கிறார் .  கர்ப்பிணி என்று கூட பாராமல் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருந்த பெட்ரோலை மருமகள் மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார்.  இதில் கீர்த்தனா உடல் முழுவதும் தீ பரவி வெப்பம் தாங்காமல் அலறி துடித்திருக்கிறார். 

 அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்தவர்கள் கீர்த்தனாவை நீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .  ஆபத்தான நிலையில் அங்கே சிகிச்சை பெற்று வருகிறார். கீர்த்தனாவின் தந்தை பொட்டு சங்கர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.   வரதட்சணை கொடுமையால் தான் தன் மகள் உயிருக்கு போராடுகிறார் என்று குற்றம் சாட்டியிருக்கிறார் பொட்டு சங்கர்.

இந்த தீ விபத்தினால்  கீர்த்தனாவின் கர்ப்பம் கலைந்துவிட்டதாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  போலீசார் கீர்த்தனாவின் கணவர் பண்டாரி , கீர்த்தனாவின் மாமியார் இதுவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.