இந்தியாவில் ஒரு மதமோ அல்லது மொழியோ இருந்ததில்லை, வெவ்வேறு சாதிகள் இருந்தாலும் தேசம் ஒன்றுதான்... ஆர்.எஸ்.எஸ். தலைவர்

 
எதிர்மறையான வளர்ச்சியில் பொருளாதாரம்…….வெட்கமில்லாத ஆர்.எஸ்.எஸ்…… ப.சிதம்பரம் தாக்கு

இந்தியாவில் ஒரு மதமோ அல்லது மொழியோ இருந்ததில்லை. வெவ்வேறு சாதிகள் இருந்தாலும் தேசம் ஒன்றுதான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசுகையில் கூறியதாவது: மக்கள் என்ன நினைத்தாலும், சொன்னாலும் விஞ்ஞானம் கூறுவது காபூலின் மேற்கிலிருந்து சின்ட்வின் ஆற்றின் கிழக்கு பகுதியிலும், சீனாவின் சரிவுகளிலிருந்து இலங்கையின் தெற்கே உள்ள பகுதிகளிலும் வசிப்பவர்கள், இன்று இருக்கும் மக்கள் 40 ஆயிரம் ஆண்டுகளாக ஒரே டி.என்.ஏ. மற்றும் மற்றும் நம் முன்னோர்கள் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். 

மோகன் பகவத்

கடந்த 40 ஆயிரம் ஆண்டுகளாக நம் அனைவருக்கும் ஒரே டி.என்.ஏ. உள்ளது. ஒவ்வொரு நபருக்கும் அவரவர் வழிபாட்டு முறைகள் இருப்பதை நம் முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். இந்த ஞானத்தை பின்பற்றுங்கள். ஒவ்வொருவரும் அவரவர் மொழியை பேச வேண்டும். அதனால் அது மேலும் வளர்ச்சியடையும்.  மதம் மற்றும் சாதி வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். 

மொழிகள்

இந்தியாவில் ஒரு மதமோ அல்லது மொழியோ இருந்ததில்லை. வெவ்வேறு சாதிகள் இருந்தாலும் தேசம் ஒன்றுதான். மன்னர்களும் வம்சங்களும் வந்து சென்றன. இந்தியா காலங்காலமாக மாறாமல் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மோகன் பகவத் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள், பல்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் அனைவரும் என்னுடையவர்கள் என்ற அத்தகைய அன்பு நமக்கு வேண்டும் என்று பேசியது குறிப்பிடத்தக்கது.