சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது நாட்டின் முன்னேற்றத்துக்கு அவசியம்.. மோகன் பகவத்

 
ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். பங்களிப்பு முடிந்தது- மோகன் பகவத்…

சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது நாட்டின் முன்னேற்றத்துக்கு அவசியம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும், முஸ்லிம் குழுவினரும்  ஒப்புக்கொண்டனர்.

நாட்டில் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, டெல்லியின் முன்னாள் துணைநிலை கவர்னர் நஜீப் ஜங், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீருதின் ஷா, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக் உள்பட முஸ்லிம் அறிவுஜீவிகள் அடங்கிய குழு அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை உதாசின் ஆசிரமத்தில் சந்தித்து பேசியதாக தகவல்.

எஸ்.ஒய்.குரேஷி

மதநல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள்சமூக உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லிம் குழுவினரும், மோகன் பகவத்தும் இந்த சந்திப்பை நடத்தினர். அதேசமயம் இந்த சந்திப்பின்போது, ஞானவாபி மசூதி பிரச்சினை, முகமது நபிக்கு எதிரான கருத்துக்களுக்கு பிறகு ஏற்பட்ட சம்பவங்கள் அல்லது எந்தவொரு கோயில்-மசூதி தகராறு குறித்து  இரு தரப்பினரும் பேசவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஞானவாபி மசூதி

சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது நாட்டின் முன்னேற்றத்துக்கு அவசியம் என்பதை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் மற்றும் முஸ்லிம் குழுவினரும் ஒப்புக்கொண்டர். இரண்டு தரப்பினரும் மத நல்லிணக்கத்தின் அவசியத்தை பாராட்டினர் மற்றம் சமூகங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் மற்றும் தவறான புரிதல்களை அகற்ற வேண்டும். இந்த முயற்சியை தொடர ஒரு திட்டம் வகுக்கப்பட்டது என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.