அவதூறுகள் என் உடலில் சத்துணவாக மாறுகின்றன - பிரதமர் மோடி பேச்சு

 
modi

அவதூறுகள் என் உடலில் சத்துணவாக மாறுகின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாஜக தொண்டர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “எனக்கு சோர்வு ஏற்படுவதே இல்லை. தினமும் 2 அல்லது 3 கிலோ அவதூறுகளை உட்கொள்கிறேன். கடவுள் வழங்கிய அருளால் அவதூறுகள் என் உடம்பில் சத்துணவாக மாறிவிடுகிறது. கடவுள் என்னை ஆசீர்வதித்துள்ளார். மோடியை தூற்றுங்கள், பாஜகவை தூற்றுங்கள். ஆனால் தெலங்கானா மக்களை அவதூறு செய்தால் அதற்கு நீங்கள் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். என்னையும், பாஜகவையும் அசிங்கப்படுத்துவதன் மூலம் தெலுங்கானாவின் நிலையும், மக்களின் வாழ்க்கையும் மேம்பட்டால், எங்களைத் தொடர்ந்து அவதூறாக பேசுங்கள்.

விரக்தியின் காரணமாக, சிலர் மோடியை தினமும் திட்டுகிறார்கள். ஆனால் அதற்கு கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. தாமரை மலரப் போகிறது என்ற உறுதியான நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.

தெலுங்கானா வளர்ச்சியடைய வேண்டும் என்றால், பின்தங்கிய நிலையில் இருந்து அதை உயர்த்த வேண்டும் என்றால், முதலில் மூடநம்பிக்கையை இங்கிருந்து அகற்ற வேண்டும்” எனக் கூறினார்.