அமைச்சருக்கு சிறையில் மசாஜ் - வைரலாகும் வீடியோ

 
de

திகார் சிறையில் இருக்கும் டெல்லி  ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான  டெல்லி அமைச்சருமான சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது பண மோசடி வழக்கு போடப்பட்டது .  இதை அடுத்து கடந்த மே 30ஆம் தேதி அமலாக்க இயக்குநரகம் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது .   திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.  இதை அடுத்து அவர் வகித்து வந்த சுகாதாரம், உள்துறை, மின்சாரம், நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட இலாகாக்கள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.   ஆனாலும் டெல்லி அமைச்சரவையில் எந்த பொறுப்பும் இல்லாமல் ஜெயின் அமைச்சராகவே நீடித்து வருகிறார். 


 இந்த நிலையில் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதாக அமலாக்க இயக்குநரகம் நீதிமன்றத்தில் புகார் அளித்திருக்கிறது. 

சிறையில் அமைச்சர் ஜெயினுக்கு விஐபி சலுகைகள் வழங்கப்படுகின்றன என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டிருக்கிறது.   இதனால் திகார் சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.

 இந்த நிலையில் தான் சிறையில் ஜெயினுக்கு மசாஜ் செய்துவிடும் இப்படி ஒரு வீடியோ வெளிவந்திருக்கிறது .  டெல்லி சிறையில் ஜெயின் படுக்கையில் படுத்தபடி காகிதத்தில் எழுதி இருப்பதை படித்துக் கொண்டிருக்கிறார்.   அப்போது அவருக்கு அருகே உள்ள நபர் ஜெயின் காலுக்கு மசாஜ் செய்கிறார்.   இந்த வீடியோவை ஆதாரமாக காட்டி நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கிறது அமலாக்க இயக்குநரகம்.   அதிகார  துஷ்பிரயோகம் என்பதற்கு இது எடுத்துக்காட்டு என்று கூறி வருகின்றனர்.