அமைச்சர் ரோஜாவின் கின்னஸ் சாதனை! ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் க்ளிக்

 
rஒ

ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோ கிராபர்கள் போட்டோ எடுத்ததால் அமைச்சர் ரோஜா கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.  

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா.  இவரது பிறப்பிடம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பகரபேட்டா  ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.ஆக இருந்தவர்,  தற்போது விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்து வருகிறார்.  அவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  இதற்காக ரோஜாவுக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

ரொ

 ஒரே நேரத்தில் 3000 பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.  கின்னஸ் சாதனைக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  ஆந்திரா தெலுங்கானாவை சேர்ந்த மூவாயிரம் போட்டோகிராபர்கள்  தனியார் மண்டபத்தில் குவிந்தார்கள்.   இதன் பின்னர் அமைச்சர் ரோஜா திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறினார்.

ரொ

  அவரைச் சுற்றிலும் 3000 போட்டோகிராபர்கள் நிறுத்தி வைக்கப்பட்டார்கள்.  ஒரே நேரத்தில் 3000 போட்டோகிராபர்களும் அமைச்சர் ரோஜாவை போட்டோ எடுத்தார்கள்.   உலகத்தில் இதுவரை யாரும் பெண் அமைச்சர் ஒருவரை ஒரே நேரத்தில் மூவாயிரம் போட்டோ எடுத்த வில்லை இதனால் வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் . இதன் பின்னர் அமைச்சர் ரோஜாவிற்கு கின்னஸ் சாதனைக்காக சான்றிதழ் வழங்கப்பட்டது.